காதல் போதை
என் இனியவளே
உன்னை பார்த்தவுடன்
பரவசம் கொண்டேன் ..!!
நீ ஒரு நடமாடும்
நந்தவனம் ..!!
உன் கண்களில்
கள்ளின் போதை ...!!
உன் இதழ்களில்
சொட்டும்
தேனின் சுவையை
பருகிட நினைத்தேன் ,,!!
நினைத்தவுடன்
என் நினைவை இழந்தேன்
என் வசம் நானில்லை
உன் வசமே நான் ..!!
--கோவை சுபா