நிம்மதி

நினைத்து நினைத்து மடிகிறேன் தினமும் 

என்றும் மகிழ்வுடன் வாழ விரும்பவில்லை 

என்றாவது நிம்மதி வேண்டுமென விரும்புகிறேன் 

கடவுளின் படைப்பில் நான் கண்டு கொள்ளா உயிரோ

இரக்கம் என்ன என்பதை காட்டாமல் வாட்டுகிறான்

உடலில் உயிரும் பாரமானது

அன்பை மட்டுமே காட்ட தெரிந்ததால் 

ஆயுள் உள்ளவரை அடிமையாய் போனேன் 

அகன்ற இவ்வுலகில் அநாதையாய் உணர்கிறேன் 

பெண்ணாய்ப் பிறந்ததால் ஊமையாய் போனேன்… 

எழுதியவர் : இந்துமதி (12-Apr-21, 9:50 pm)
சேர்த்தது : indhumathi
Tanglish : nimmathi
பார்வை : 96

மேலே