பேருந்து பயணத்தில்

எட்டு மணி பேருந்து
பிடித்து விட வேண்டுமென்று,

மூன்று மைலை மூச்சிற் முட்ட,
வந்தடைந்தேன். மிதிவண்டியில்,

கிழக்கு நோக்கி பார்வையிட,
கதிரவனின் பிடிக்குள் இருந்து,

பேருந்து, மெல்ல நகர்ந்து வந்து ,
என்னருகில் நிற்க,

ஜன்னலோரத்தில் விடியல் நிலையிலும் ,
என்னிலாவினை நான் கண்டிட,

கண்டு கொள்ளாமல் போயிருப்பேன்
உன்னை பார்க்காத வரை,

கடைக்கண் பார்வையில்,
என்னிதயத்தை விழி திறந்து,

என்னை, வீற்றி விட்டு
மனதோடு மயக்கும் நிலையில்,
பரிதவிக்கிறேன்,

நாளை
அன்னை பேருந்து வருகை பார்த்து?


விடியல் விரைவாக வர எண்ணி

வெள்ளூர் வை க சாமி
(அண்ணா நூற்றாண்டுநூலகம்)

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (16-Apr-21, 2:54 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
பார்வை : 242

சிறந்த கவிதைகள்

மேலே