விவசாயி

உற்சாகம் கொள்....
உடைந்து போகாதே....
உரிமை கேள்....
உடைமை மீள்....
களவு செய்யும் கருப்பாடுகளிடம்...
கடன் சேர்க்காதே...
கிளை ஒடிந்த மரமாயினும்....
கலை இழந்த காடாயினும்...
உன் கையால் உயிர் மீட்டெடு...
உழவும் உணவும் உனதாகும்...
உயிர் காக்கும் மருந்தாகும்...
புஞ்சை புணரமை...
நஞ்சை வளர்...
நெஞ்சை நிமிர்....
பசித்தாகம் தீர்த்திடவே...
விவசாயம் காத்திடுவோம்...

எழுதியவர் : Gopi (17-Apr-21, 8:07 am)
சேர்த்தது : கோபிமு
Tanglish : vivasaayi
பார்வை : 785

மேலே