சின்ன கலைவாணன் மரணித்தான்

முகிலின் தூறல் கொடூர அமிலமாய்
அழகிய தென்றலும் நெருப்பாய் வீசிட
அந்தரத்தில் சிக்கிய பறவையாய்
இன்றைய (17.04.2021) காலை விடிந்தது துயராய்
சுழலில் சிக்கிய பெரிய கப்பலில்
மாட்டிய மக்களின் மனநிலையில் யாவரும்
மரணம் மறுபடியும் மறந்து எடுத்தது
சிறந்த மனிதனின் இணையில்லா உயிரை
பலமாய் பல பிழைகளைச் செய்யும் இயற்கை
இயற்கை ஆர்வலனை இறுதியாய்
இறுதி யாத்திரைக்கே அழைத்துச் சென்றதே
சின்ன கலைவாணன் கலந்தான் இயற்கையோடு.
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (17-Apr-21, 2:11 pm)
பார்வை : 172

மேலே