சொற்களால் சொர்க்கம் தருபவளே 555

***சொற்களால் சொர்க்கம் தருபவளே 555 ***


அழகே...


எங்கிருந்து
வந்தவள் யார் நீ...

தென்றலில் பிறந்து
வந்த தீயா...

பூவில்
மலர்ந்த புயலா...

என் சுவாசத்தை நிறுத்தி
செல்லும் சூறாவளியா...

நீ வீசிய அந்த ஒருபார்வையே
என்னை ஆளுதடி...

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
இடையில் நான் நிற்கிறேன்...

ஆனந்த கனவுகண்டு ஆர்ப்பரிக்கும்
என் தேடல்களுக்கு...

நீ பொன் மலராய்
கிடைத்தாய்...

என் பார்வையை உன் பார்வையை
எப்போது சந்திக்கும்...

சொல்லால் சொல்ல
முடியாத சந்தோசத்தை...

என் கண்கள்
சொல்லும் உன்னிடம்...

கவிசிந்தும் உன் இதழ்களுக்கு
பூட்டு போடாதே...

சொற்களால்
சொர்க்கம் தருபவளே...

எதற்கு இன்னும்
என்னிடம் மௌனம்...

என்னருகில் வந்து இதழ்கள்
பிரித்து ஒருவார்த்தை பேசு...

நாளைய
என் இல்லரசியே.....***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (17-Apr-21, 4:58 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 569

மேலே