பழங்களோ பலவிதம்
பழங்களோ பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு நிறம்
சுவைகளோ தனிவிதம் ஒவ்வொன்றும் தனி தரம்
நோய் வந்தால் தந்திடும் பழங்களும் ஒரு வரம்
காயிலே பழுக்க வைத்திடும் மனிதனின் தந்திரம்
புளித்திடும் பழங்களை நிறையவே தந்திடும் பல மரம்
பல நாட்கள் பழுத்திருந்தால் அழிகிடும் பல பழம்
பிறந்த மழலைக்கு உணவாகி உணர்வாகும் பல பழம்
பழமென்ற பெயர் கொண்ட எட்டியும் கசக்கும் ஒரு பழம்
கரும்புக்கு இல்லையே பூ பூத்த பின்னாடி ஓர் பழம்
நீரிலுள்ள பூக்களுக்கு இல்லையே தனியாக ஒரு பழம்
இறப்பையும் தந்திடும் அரளியின் அழகான ஒரு பழம்
------- நன்னாடன்