மழிக்க ஓர் ஆயுதம்

ஆதியில் தோன்றியவனுக்கு இருந்திருக்காதே
இன வேறுபாடு மத வேறுபாடு என்பவைகளே
உணவினை தேடுதலும் இடங்களை தேடுதலுமே
தலையாய பணியாய் இருந்திருக்குமே அன்றி
பிரித்துப் பார்க்கும் கேடெண்ணம் தோன்றிருக்காது
தம் தேவைக்கு மிகுதியாய் எதனையும் பெற்றிருப்பின்
அப்போது துளிர்த்திருக்கும் மாற்று எண்ணங்கள்
யாவரும் அறியும் வண்ணம் காட்டவே மயிரிலே
மாற்றத்தை ஆரம்பித்ததே குடுமி கட்டலெனும் கலை
மழிக்க ஓர் ஆயுதம் உண்டான பின் ஆனதே
மொட்டையிடுதலும் தலைமயிரை வெட்டுதலுமாமே
அதில் மாறுபட்டவனே தாடி மீசையை அலங்கரித்தான்
இவைகளை வெறுத்தவனால் ஆனதே நிற குறியீடு
விதைகள் சங்குகளை கோர்த்தோரால் ஆனதே மாலை
தற்காலத்து அறிவாளிகள் இவைகளை காட்டவே
பின்பற்றும் முறையே ஆடைகளில் அலங்கரிப்பு
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Apr-21, 9:27 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே