329
முகக் கவசமே உயிர்க் கவசம்....
கொரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் போகிறது....
27வயதான சென்னை இளைஞர் கொரோனாவால் மரணம்... அவருக்கு எந்த இணை நோயும் இல்லை... இது இன்று வந்த அதிர்ச்சி தரும் செய்தி....
கொரோனா தடுப்பூசி போடலாமா?வேண்டாமா? என்ற சர்ச்சை ஒருபக்கம் போய்கொண்டிருக்க.... இரு தினங்களுக்குமுன் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் காலமானது, இன்னும் பல சந்தேகங்களை மனதில் ஏற்படுத்தி... மக்களை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது....
பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற எச்சரிக்கை , விதி மீறலுக்கு அபராதம் என்று அரசு எவ்வளவு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தும்.... அலட்சியமாக திரியும் மக்களை கண்கூடாக பார்க்க முடிகிறது....
இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காக்க ஒரேவழி சுயக் கட்டுப்பாடே....
(1) அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது
(2) வெளியில் செல்லும்போது தவறாமல் முகக் கவசம் அணிவது..
(3) பிறரை சந்தித்துப் பேசுகையில் இரண்டடி இடைவெளியை பின்பற்றுவது
(4) பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு அம்சங்களை தவிர்ப்பது...
அரசு அதை திறந்து வைத்திருக்கிறார்கள் ... இதையெல்லாம் மூடச் சொல்கிறார்கள் என்று வாக்குவாதம் செய்யாமல்.... நாம் நம் வாயையும் மூக்கையும் முகக் கவசத்தால் மூடுவோம்.... நோயிலிருந்து தப்ப இதுவே ஒரே வழி!