காதலின் பிரிவு

காதலின் பிரிவு
எவ்வளவு துயரமானது
என்பதை வார்த்தைகளின்
துணையோடு கவி படைக்க
முயற்சி செய்தேன் ...!!

ஆனால்...
கவி படைக்க வார்த்தைகள்
கிடைக்காமல் தவித்தேன்
பிறகு சிந்தித்து பார்த்தேன் ..!!

நம் காதலின் பிரிவின் போது
பிரிந்து நின்றது
உருவங்கள் மட்டுமில்லை..!!

என் உணர்வுகளும்
என்னை விட்டு
பிரிந்து விட்டது என்பதை
புரிந்து கொண்டேன்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Apr-21, 5:49 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kathalin pirivu
பார்வை : 1612

மேலே