ஆறுதல் சொன்ன அத்தை மகளே 555

***ஆறுதல் சொன்ன அத்தை மகளே 555 ***ப்ரியமானவளே...


மாமன் மகள் உன்னை
மனதில் நினைத்தேன்...

நீயும் மல்லிகையாய்
மனம் வீசினாய்...

என் தோளில் சாய்ந்து
காதல் கவிதை சொன்னவள்...

உன் உறவுகளின்
பேச்சைக்கேட்டு...

என்னை
உதரி தள்ளினாய்...

அழுத
என் கண்களை துடைத்து...

ஆறுதல் சொன்னவள்
அத்தை மகள்...

என்னை அன்போடும்
அனைத்து கொண்டாள்...

காற்று செல்லும்
இடைவெளியில் கூட...

அவள் காதலை
முழுமையாக நிரப்பிவிட்டாள்...

உனக்கு ஓர் நன்றி...

நீ என்னை
மறந்ததால்தான்...

அந்த மாந்தோப்பு மயிலும்
என்னை நெஞ்சில் சுமக்கிறது...

அத்தை மகள்
எனக்கு அன்னையானால்...

நாளை என் மழலைக்கும்
அன்னை அவளே...

உன்னால் எனக்கு கிடைத்த
இன்னொரு தாய் அவள்...

தாரமும்
தாய்க்கு இணைதானே.....***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (1-May-21, 9:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 290

மேலே