என்னையும் மறந்து எண்ணையும் மாற்றி சென்றவள் நீ 555

***என்னையும் மறந்து எண்ணையும் மாற்றி சென்றவள் நீ 555 ***


என்னவளே...


நீ என் உயிர் என்று
உன்னை நேசித்தேன்...

என்னை மறந்து
நீ சென்றாய்...

நான் உயிரென்று ஒருஜீவன்
என்னை நேசிக்கிறது...

உன்னையே நினைத்து
கொண்டு இருந்த என்னை...

உன்னை மறக்கும் அளவிற்கு
எனக்கு அன்பு கொடுத்தவள் அவள்...

எத்தனை மாதங்கள்
உனக்காக காத்திருந்தேன்...

என்னையும் மறந்து எண்ணையும்
மாற்றி சென்றவள் நீ...

இன்றோ என்னை
மறந்துவிட்டாயா என கேட்கிறாய்...

உன் நினைவில்
நான் மறித்திருந்தால்...

மண்ணில் புற்கள்
முளைத்திருக்கும்...

என்னை நேசித்து அன்பெனும்
ஆறுதல் சொன்னவள் அவள்...

மீண்டும் உன்னை ஏற்று
என்னை ஏற்று கொண்டவளை...

உன்னைப்போல கைவிட
எனக்கு தெரியாது...

சென்றவள்
சென்றவளாகவே இருந்துவிடு...

எப்போதும் என்னவள்
முன்னாள் வந்துவிடாதே...

அவள்
கொன்றுவிடுவாள் உன்னை.....


***முதல் பூ பெ.மணி***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (2-May-21, 8:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 464

மேலே