உன் நினைவுகளை சுமக்கிறேன் நித்தம் 555

***உன் நினைவுகளை சுமக்கிறேன் நித்தம் 555 ***


என்னவளே...


ஒருமுறை தான் உன்னை
நினைக்க வைத்தாய்...

உயிர்வரை உன் நினைவே
ஒலிக்கிறது என்னில்...

கண்ணீரில்தான்
உலகின் காதலோ...

உள்ளத்தின் காயத்தை
எப்படி யாரிடம் சொல்வேன்...

என் தாய் மொழியும்
மௌனம் ஆனது...

என் காதல் மட்டும்
இன்னும் குறையவில்லை...

காதலின் வலியில்தான்
பலகவிதைகள்
உல
கில் பிறக்கிறது...

உன்னை பற்றி
சிந்திக்கும் போதெல்லாம்...

பிறக்கிறது
பல கவிதைகள்...

அடி மனதில் அமர்ந்திருக்கும்
உன் நினைவுகளை...

நித்தம்
நித்தம்
சுமக்கிறேன்...

உன்னை காணாத என் கண்களோ
செல்லரித்து போகுதடி...

உன்னுள் ஒளிந்துகொள்ள
வேண்டும் நான்...

கொஞ்சம் தருவாயா இடம்
என் மாந்தோப்பு குயிலே.....எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-May-21, 9:20 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 696

மேலே