என்னோடு நீ பேச மறுப்பதென்னடி 555

***என்னோடு நீ பேச மறுப்பதென்னடி 555 ***


ப்ரியமானவளே...


மாலை பொழுதும்
வீசும் தென்றலும்...

எத்தனை சுகம்
சொல்ல வார்த்தையில்லை...

உன்
பிரிவில்தான் உணர்ந்தேன்...

வீசும் தென்றால் கூட
தணலாய் சுடுகிறது...

அந்திமாலை
பொழுதும் நள்ளிரவாக...

தொலைவில் கூவும்
குயிலின் ஓசைகூட...

என் இறுதி ஊர்வலத்தில்
ஓதும் ஓசையாக கேட்குதடி...

உன்னோடு சேர்ந்து ரசித்த
செக்க சிவந்த வானம்கூட...

எனக்கு
மட்டும் கருமையாகவே...

நீ இல்லாத வாழ்க்கையில்
பிரிவின் வலி மிக கொடியது...

தணலாய் வீசும் தென்றலில்
வேற்கிறதா என் மேனி...

உன் பிரிவின் வெப்பத்தால்
வேற்கிறதா தெரியவில்லை...

தினம் காற்றோடு
கலந்து பேசுபவள்...

என்னோடு நீ
பேச மறுப்பதென்னடி.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (26-Apr-21, 5:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 953

மேலே