விண்ணில் நீசென்றால் ஊர்வசி மேனகை பொறாமையில் புழுங்குவார்கள் போகாதே
வண்ண விழிகள் பேசும் மொழியை எந்தக் கவிதையில் பாடுவேன்
கண்ணிமைத் தூரிகை எழுதும் ஓவியத்திற்கு டாவின்ஸிக் கோடுகள் போதுமோ
வண்ண வானவில்லை முறியடிக்கும் புன்னகைக்கு வெற்றிப் பரணிநான் பாடவோ
விண்ணில் நீசென்றால் ஊர்வசி மேனகை பொறாமையில் புழுங்குவார்கள் போகாதே !