காதல் திருமணம்
காதல் திருமணம்
ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் ஒருவரை ஒருவர் விரும்புவது இயற்க்கை.அப்படி பழகி மணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு நிலை வரும் போது,பெண் தன்னுடைய பெற்றோரின் சம்மதம் வாங்குவது மிக அவசியம்.
காரணம் பெண்ணை நம்பி பல கனவு கோட்டைகள் கட்டி வைத்து இருப்பார்கள்.
அது மட்டும் அல்ல,அது அவர்களுக்கு மான பிரச்சினை,உரிமை பிரச்சினை.
ஆனால் நிறைய பேர்,அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் வீட்டை விட்டு வெளியேறி மணம் புரிந்து கொள்கிறார்கள்.அவர்களை பொறுத்த வரை அது சரியாக இருக்கலாம்.ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்.இந்த பெண் ஒரே மகளாக கூட இருக்கலாம்.எவ்வளவோ இன்னல்கள் நடுவே வளர்த்தி ஆளாக்கி ஒரு வேலைக்கு சேர்த்து,நினைத்து பாருங்கள்,எவ்வளவு கஷ்டம் பட்டு இருப்பார்கள்.அப்படி வளர்த்த பெற்றோரை
சிறிது காலம் பழகிய ஆணுக்காக துறந்து
வெளியேற துணிந்தால் அந்த பெண் ஒரு கல் நெஞ்ச காரி.அதற்க்கு பின்னும் அவள் அப்படி தான் இருப்பாள்.
பெற்றோர் மறுப்பு தெரிவித்தால்,அதன் காரணங்களை அறிந்து அதற்கு அவள் சரியான விளக்கம் அளித்து அவர்கள் இசைவை பெற வேண்டும்,கால தாமதம் ஆனால் கூட.அப்படி அவர்கள் இசைவு தந்தால்,பிற்காலத்தில் இவளுக்கு ஏற்படும் எந்த பிரச்சனைகளுக்கும் உறு துணையாக நிற்பார்கள்.
பெற்றோரின் மனதை வருத்தி செய்த பின் அந்த பெண் எப்படி அமைதியாக வாழ முடியும்.அந்த கோபம் முழுவதும் தன் காதல் கணவன் மீது பாயும்.நிம்மதியே இருக்காது.
ஆண் தன் பெற்றோருக்கு உதவி செய்து நல்ல பெயர் வாங்கி விடுவான்.ஆனால் பெண் உதவ நினைத்தாலும் தன் கணவன் அனுமதி எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
அதை மீறி செய்ய போக,என் பேச்சை கேட்பது இல்லை என்ற ஒரு விவாதம் உருவாகும்.
ஆனாலும் பெண் பொறுத்து தான் போகிறாள்,அவளுக்கு என்ன சந்தோசம் கிடைத்து விடும்,விருப்ப பட்டவனை மணம்
புரிந்து கொண்டேன் என்பதை தவிர. தன் மன புளுக்கத்தை வேறு யாரிடமும் பகிரவும் முடியாது,யாரும் ஆதரவாக பேச மாட்டார்கள்.
பெற்றோர் பேச்சை மீறி செய்து இருந்தாலும் எப்பாடு பட்டாவது அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்த முயற்சி செய்து பாருங்கள்.அவர்கள் ஆதரவு என்றும் தேவை படும்.
இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல.
ஒரு எண்ண அலை மட்டுமே.
வெற்றி பெற்ற வர்களும் இருக்கலாம்.
துன்ப படுபவர்களும் இருக்கலாம்.
அதே நேரம் நான் விருப்ப திருமணம் செய்ய எதிர் ஆனவனும் அல்ல.அதை முறையாக செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது என் கருத்து.