கவிதை பாடிட ஏதோவொன்று உள்ளே நச்சரிக்குதே

ஓடிவரும் நீரோடை உன்பெயர் சொல்லுதே
ஆடிவரும் தென்றல்உன் கூந்தல் தழுவுதே
தேடிவந்த என்னைத் கவிதை ஒன்றைப்
பாடிட ஏதோவொன்று உள்ளே நச்சரிக்குதே !


ஓடிவரும் நீரோடை உன்பெயர் சொல்லுதே
ஆடிவரும் தென்றல்உன் கூந்தல் தழுவுதே
தேடிவந்த நான்உன் னெழில்முகம் வாடிடாமல்
பாடிடவோ சொற்தமிழால் சொல் !

ஓடிவரும் நீரோடை உன்பெயர் சொல்லுதே
ஆடிவரும் தென்றல்கூந் தல்தழுவ - ஓடியுனைத்
தேடிவந்த நான்உன் னெழில்முகம் வாடிடாமல்
பாடிடவோ சொற்தமிழால் சொல் !

-----முறையே வ வி இ வெ நே வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-21, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே