மனசாட்சி
பற்பல குரல்கள் பல இடத்தில கேட்பினும், உன் குரலின் அழகு யாருக்கும் கேட்பதில்லை,
எங்கெங்கும் மனித உறவை தேடி செல்லும் ஒருவனுக்கு, உன் உறவை புரிந்து கொள்ள பொறுமை இல்லை,
எங்கும் அமைதியை தேடி திரியும் ஒருவனுக்கு, உன் நட்பை புரிந்து கொள்ள தெரிய வில்லை
எவரும் தன்னுடன் இல்ல விட்டாலும், நீ அவனுடன் இருப்பாய் என்ற எண்ணம் தோன்ற விலை,
குழப்பத்தில் சுற்றி கொண்டு இருக்கும் மானிடனுக்கு, நீ பேசும் வார்த்தைகள் கேட்பதில்லை,
மூன்றாம் நபரை தேடி கதைக்கும் மனிதர்களுக்கு, தன மனசாட்சியிடம் கதைக்க நேரம் இல்லை...
எவர் நம்முடன் இருப்பினும், மனசாட்சி நம்மை விட்டு பிரிவடிக்கை...
- ஜெயப்ரகாஷ்