டிராபிக் இராமசாமிக்கு நெஞ்சஞ்சலி

டிராபிக் இராமசாமிக்கு நெஞ்சஞ்சலி

டிராபிக்" இராமசாமிக்கு நெஞ்சஞ்சலி
------------------------------------------------------------
தலை நகரில் உண்மை தள்ளாடும் போதெல்லாம்
தலைவனாய் எதிர்த்து நின்று தோள் கொடுத்தீர்
அரசாங்கத்தின் தவறையும் அச்சமின்றி எதிர்த்தீர்
அவர்கள் அடங்காத போது வழக்கு தொடுத்தீர்
வழக்கு மன்றங்களும் சலித்து ஏசிய போதெல்லாம்
வழுவாமல் சட்டத்தின் உதவியோடு அதைத் தகர்த்தீர்
குண்டர்கள் மிகுதியாய் பயமுறுத்தினாலும் ஏளனமாய்
எவரின் கெடுஞ்செய்கையையும் அங்கே எச்சரித்தீர்
கிழப்பருவம் வரையில் கம்பீர பிம்பமாய் இருந்த
"டிராபிக்" இராமசாமி என்னும் தமிழர் குலசாமியே
நீர் நீத்த இந்நாளில் (04.05.2021) கண்கள் நீர் சிந்த
நெஞ்சுருகி உன் புகழை ஏத்துகிறோம் உரக்கவே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-May-21, 6:34 pm)
பார்வை : 70

மேலே