மழை நினைவுகள்
அந்தி கருக்கலிலே
வானம் தான் இருண்டிருச்சே!
மயிலும் தோகை
விரித்தாடியிருச்சே!
கருத்தரித்த மேகங்கள்
மழையை பிரசவித்திருச்சே!
மண்ணும் தான்
மணத்திருச்சே!
மண்புழுக்கள் வெளியே
வந்திருச்சே!
இறக்கை முளைத்த
ஈசலும் தான்
பறந்திருச்சே!
இரவினிலே
மழை வண்டுகள்
ரீங்காரமிடுகிறதே!
தவளைகள் இணை தேடி
கத்துகிறதே!
தெருவிலே தேங்கிய
மழை நீரில் காகங்களும்
இறகடித்து குளிக்கிறதே!
நேற்று பெய்த மழையில்
காளானும் முழைச்சிடுச்சே!
என் மனமும்
இவற்றையெல்லாம்
ரசிக்கிறதே!
சிறுவயதில் மழையில்
நனைந்து விளையாடியது
நினைவுக்கு வருகிறதே!
நீங்காத நினைவுகள்
நிஜமாக மனமும் ஏங்குகிறதே.......
ஜோதி மோகன்
புதூர்