எங்கே இவை
நீர் இறைத்த கிணறு எங்கே?
நீந்தி குளித்த ஆறு எங்கே?
பச்சைப்பசேல் வயல்வெளிகள் எங்கே?
பறந்து திரியும் தும்பிகள் எங்கே?
இரவினில் ஒளிரும்
மின்மினிப்பூச்சிகள் எங்கே?
இணை தேடி கத்தும்
தவளைகள் எங்கே?
ஊஞ்சல் கட்டி ஆடிய மரம் எங்கே?
ஊரும் அட்டைப்பூச்சிகள் எங்கே?
மைதானத்தில் விளையாடும்
குழந்தைகள் எங்கே?
ஊர்கதை பேசும் பெண்கள் எங்கே?
அரசியல் பேசும் ஆடவர்கள் எங்கே?
கால மாற்றத்தில் எல்லாம்
காணாமல் போச்சே....
ஜோதி மோகன்
புதூர்