நான்கு வழிச்சாலை

நான்கு வழிச்சாலையிலே
நல்லதொரு பயணம்
நால்சக்கர வாகனங்கள்
செல்லும் அதில் தினமும்
சாலையோரம் புதுப்புது
கடைகளின் ஜனனம்
இணைபிரியா தம்பதிபோல்
இரு புறமும் சாலை
இடையூறாய் இடையே
சுங்க சாவடிகள்
விறுவிறுப்பாக
வியாபாரம்
நடந்திடுமே
அதிலே!
இளைப்பாற இடையிடையே
தேநீர் கடைகள்
சாலை விதிகளை
கடைபிடித்தால்
சந்தோசமான பயணம்
கடைபிடிக்க தவறினால்
வந்திடுமே ஆபத்து
மிதமான வேகத்தில்
இதமான பயணம்
செய்திடுவோமே தினமும்....

எழுதியவர் : ஜோதிமோகன் (6-May-21, 11:41 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 51

மேலே