தலை நிமிர்ந்திடு தமிழா

வீரத்தின் அகவை தமிழன்
வெற்றியின் வேதம் தமிழன்
வேள்வியின் சுவாலை தமிழன்
வேங்கையின் மறுருவம் தமிழன்

தடைகள் உடைத்தெறிந்து
தலைகள் நிமிர்ந்தெழு தமிழா
தமிழைச்சிதைப்போரை
சிதைத்து மார்பு தட்டு தமிழா
பண்பாடு புகழ் பாடி கொண்டாடு தமிழா
என்பாடும் தானென்று அகலாதே தமிழா

வீண் வார்த்தை ஓதி
மண் மானம் போக்காதே
தற்பெருமை உரைத்து
வீணாக்காதே காலத்தை
வீரத்தை நிலை நாட்டி
உருவாகிய தமிழா
வீழ்ந்தாலும் தமிழன்
வரலாறாவன் என போராடு தமிழா

தேன் தமிழ் சுவைக்கும்
எம் தமிழர் என்றும் நிலைப்பான்
பிரபஞ்சம் உள்ளவரை.
தொன்மைத்தமிழ் புகழ்
தன்மை அறியும் படி பா பாடு தமிழா.
அச்சம் அகற்றி அஞ்சாது வாழப்பழகு .
பச்சைத்தமிழன் என்ற செருக்கோடு .
தலை நிமிர்ந்திடு தமிழா.
விலை பேசி கொலை செய்யாதே
தமிழை..

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (6-May-21, 2:37 pm)
பார்வை : 1479

மேலே