மனித வாழ்க்கை

மனித வாழ்க்கை

சொல்லவும் முடியாமல்
தள்ளவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
நிறுத்தவும் முடியாமல்
தொடரவும் முடியாமல்
சில தேடல்கள்
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
சில உண்மைகள்
காணவும் முடியாமல்
மூடவும் முடியாமல்
சில காட்சிகள்
வரவும் முடியாமல்
போகவும் முடியாமல்
சில பயணங்கள்
பிடிக்கவும் முடியாமல்
விடவும் முடியாமல்
சில பிணைப்புகள்
வாங்கவும் முடியாமல்
விற்கவும் முடியாமல்
சில நியாயங்கள்
வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல்
சில வாழ்க்கைகள்
இன்பங்கள் எத்தனையோ
இன்னல்களும் அத்தனை
இதுவே வாழ்க்கை என
அறிந்து செயல்படு மனிதா

எழுதியவர் : கே என் ராம் (7-May-21, 8:01 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : manitha vaazhkkai
பார்வை : 59

மேலே