பூமிக்கு சொந்தம்

உயிர்கள் உருவானதற்கும்
உருவான உயிர்கள்
தொடர் வாழ்க்கையைத்
தொலைக்காமல் இருப்பதற்கும்
மண்ணின் இயற்கையே
மூல காரணம் என மனித இனம்
அறிந்திருந்தும்,
இயற்கை வளங்களை
அழித்து நாசமாக்குவது—மனிதனுக்கு
வேண்டுமானால்
ஏற்புடையதாய் இருந்தாலும்
ஏனைய உயிர்கள்
ஏன் அழியவேண்டும்?
பூமி மனிதனுக்கு சொந்தமில்லை
மனிதனும், மற்ற உயிர்களும்
பூமிக்கு சொந்தம்

எழுதியவர் : கோ. கணபதி. (7-May-21, 9:26 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : boomiku sontham
பார்வை : 22

மேலே