வாழ்க்கை வளம் - கலிவிருத்தம்

வாழ்க்கை வளம் - கலிவிருத்தம்
(மாங்கனி மாங்கனி மாங்கனி மா)

கோடாதன வுயர்கோலொடு குளிர்மாறில குடையும்
வாடாதன தனிவாகையு மதமாறில களிறு
மோடாதன வடறானையு முளகோனொடு நகரம்
வீடாதன நெறிமாணுறி, மெலியாநல முளதால் 61

- நகரப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

நான்கு சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு,

கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-21, 3:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கவிதைகள்

மேலே