சிவவிசால்
பாட்டிம்மா, தாத்தா ஏராளமான சொத்தைச் சம்பாதிச்சிருக்கிறாரு. என்னை கதாநாயகனாக்க ஐம்பது கோடி செலவில ஒரு படத்தைத் தயாரிக்கிறதா ஆறு மாசத்துக்கு முன்னாடியே சொன்னீங்களே ஆது என்ன ஆச்சு?
@@@@@@@@
அட கந்தையா, பாரதிராசாவக் கேட்டன். அவுரு முடியாதுன்னு சொல்லிட்டாரு..பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சமுத்திரகனி ஒப்புதல் குடுத்தாரு. வைரமுத்து கதை வசனம் பாட்டுங்கள எழுத ஒத்துட்டாரு. மற்ற கலைஞர்களை எல்லாம் சமுத்திரக்கனி பாத்துக்குவாரு.
@@@@@@@
சரி. நீங்க தாத்தா பேரை எனக்கு வச்சுட்டீங்க. 'கந்தையா'ங்கிற பேரை வச்சிட்டீங்க. இந்தப் பேரோட நான் நடிச்சா படம் ஓடுமா?
@@@@@@@
எனக்கு அது தெரியும்டா பேரா. தமிழ்ப் பேரை வச்சுட்டு நீ நடிச்சா நல்ல படமா இருந்தாக்கூட நம்ம சனங்க பாக்கமாட்டாங்கனு எனக்கு தெரியும். சமுத்திரகனியும் அதைத்தான் சொன்னாரு.
இந்திப் பேரா இருந்தாத்தான் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க. படம் உம் பேரை மாத்தணும். நானே அதை முடிவு.பண்ணீட்டன்டா கந்தையா.
@#@####
என்ன பேருன்னு சொல்லுங்க பாட்டிம்மா.
@@@@@@
நானும் யோசித்துப் பாத்தேன்..விசால் (விஷால்) னு ஏற்கனவே பிரபலமான நடிகர் இருக்கிறாரு. இன்னோரு நடிகர் பேரு விச்சனு விசால் (விஷ்ணுவிஷால்). அதரனால உம்.பேரு 'சிவவிசால்'
(சிவவிஷால்).
@@@@||@
ஆஹா. அருமை அருமை பாட்டி.
@@@@@@@
நம்ம வக்கீல் உன் பேரை அதிகாரப்.பூர்வமா மாத்த வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திட்டாருடா கந்தையா.
@@@####
என்ன பாட்டி எம். பேரை மாத்தினதுக்கப்பறமும் என்னை 'கந்தையா'னு கூப்படறீங்க?
@@||||||
டேய் உன்னப் பாக்கிறபோது உந் தாத்தாவ.பாக்கிற மாதிரியே இருக்குது. நம்ம பங்களாவில நீ கந்தையா..வெளி உலகத்துக்கு நீ சிவவிசால் (சிவவிஷால்)
@@@@@@
ஓ.... அப்பிடியா. சரி. நம்ம.பங்களாவுக்கு வெளில என்ன 'கந்தையா:னு கூப்பிடக் கூடாது பாட்டிம்மா.
@@@@@@
சரிடா கந்தையா.