நிழல் யுத்தம்
மனதில் இருப்பவளை
காதலிப்பது என்பது
புதுமை இல்லை
எல்லோரும்
செய்வதுதானே ...!!
ஆனால்...
மனதில் நினைத்தவளின்
மனதில்
நான் இல்லையென்று
தெரிந்தும் ...!!
தினமும் அவளை நினைத்து
அவளுடன்
நிழல் யுத்தம் செய்து
நான் வாழ்கிறேன்
நிழல் நிஜமாகும்
என்ற நம்பிக்கையுடன் ...!!
--கோவை சுபா