அழிக்காதே நீ வாழும் பூமியை
புழுதி உலகில்
புழுங்கித்திரியும் மனிதா
புல் பூண்டு மரம் செடிகொடிகளை அழித்துவிட்டு
பிராணவாய்வுக்காக
பெரிதும் தவிக்கின்றாய்
பழுதானது உன் இதயம் மட்டுமல்ல
இந்த பரந்த உலகமே
பகழிப்போன வாழ்க்கையில்
பழமையை மறந்து
பலியாடாகிவிட்டு
பயத்தில் ஓடிப்
பதுங்கு கின்றாய்
வாழும் உலகை பாழும் உலகமாக்கிவிட்டு
பழியை பிறர்மேல் சுமத்து கின்றாய்
பாழாப்போன உன் பழக்க வழக்க மாற்றத்தால்
பசிதீர்த்த பசுமை விவசாயமும்
பழுதானது
புரட்சி புரட்சி என்று
பூமியையே புண்ணாக்கிவிட்டு
புழுவாங் இப்பொழுது துடிக்கின்றாய்
விஞ்ஞன சாதனைகள்
வெறியனாக்க வேண்டாம்.
உன்னை நீ
வேற்றுலகைத் தேடும் நீ
நீ வாழும் உலகை
வெறும் உலகாக்க வேண்டாம்
போதும் போதும் உன் பொய்யான வாழ்க்கை
புகைந்;து போன உலகை புதுப்பிக்க
புதுய பசுமைய் புரட்சியை உருவாக்கு
இளமையாகட்டும் பூமி
சவமாக ஆகும்
சமுதாயத்தை காக்க
சற்றே யோசித்து செயல்படு
சந்ததியர்கள் நிம்மதியாக வாழ
நீ சுய புத்தியை பயன்படுத்தி
இயற்கையுடன் ஒன்றி வாழக் கற்றுக்கொள்
இழைக்காதே இயற்கைக்கு தீங்கு
அழிக்காதே நீ வாழும் பூமியை
இருக்கும் பூமி ஒன்றுதான்
அதில் நீ இருக்க
இனியாவது சிந்தித்து செயல்படு
அ. முத்துவேழப்பன்