ஓடுகின்ற நீரோடை உன்னைப்பார்த்து

ஓடுகின்ற நீரோடை உன்னைப்பார்த்து
ஓட்டத்தை மறந்து நிற்குது
ஓடையில் துள்ளுகின்ற மீன்கள் நீந்துவதை மறந்து
துள்ளித் துள்ளி உன்னைப் பார்க்குது
வீசுகின்ற தென்றல் தோட்டத்தை மறந்து
உன் கூந்தலிலே தங்கி விட்டது
நீரோடையில் நீராட வந்த நானும் எனைமறந்து
உன்னழகில் மயங்கி நிற்கிறேன்
இயற்கையின் இந்த எந்தப் பிரஞையும் இன்றி
எந்த துஷ்யந்தனை நினைத்து உன்னை மறந்து நீ நிற்கிறாயோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (12-May-21, 9:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே