காதல் ஜோதி

என் இனியவளே
உன் இதயத்தில்
நான் ஏற்றி வைத்தேன்
"காதல் தீபம்"..!!

கோவில் மரத்தடியில்
பக்தர்கள் ஏற்றிய தீபம்
நன்கு எரிய வேண்டுமென்று
இறைவனிடம் பிராத்தனை
செய்வதைப்போல்..!!

உன் பக்தன் நானும்
"காதல் தீபம்"
ஏற்றி வைத்து உன்னிடம்
பிராத்தனை செய்தேன்
அது சுடர்விட்டு எரிந்து
"காதல் ஜோதியாக"
உன் கண்களில் ஜொலித்தது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-May-21, 10:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal jothi
பார்வை : 156

மேலே