நாம் ஒவ்வொருவரும் வேண்டிடுவோம்
அன்று வானரப் படை கடலைக் கடந்திட
குன்றா அலைகள் கொண்ட கடலின்மீது
பாலம் அமைத்திட அப்பணியில் பங்கு
கொண்டதாம் ஓர் அணில் தானும்
தலைமீது சிறு கற்கள் ஏந்தி அப்பணியில்
பங்கு கொண்டதாம் ஸ்ரீராமன் புகழ்ந்திட
அவ்வணில் போல நாம் ஒவ்வொருவரும்
ஏன் இந்த கொடிய கொரோனாவை ஒழிக்க
வேண்டி கொஞ்சம் நாம் இருக்கும்
இடத்திலிருந்தே ஈசனை வேண்டி துதித்திடலாமே