தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி மா)

இருமூவகை வதனத்தொடும் இளையோனெனத் திரியும்
ஒருமாமுக னொடுசென்றிடும் உயர்காளையி னுலவும்
பெருமாமறை யவரேயென முனிவோரெனப் பெயருந்
தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள். 10 திருவிளையாட்டுப் படலம், கந்த புராணம்

முதலடியில் கனிச்சீர் என்ன வருகிறதோ, அதே கனிச்சீர் நான்கடிகளிலும் முதல்சீராக வர வேண்டும்.
ஈற்றுச்சீர் தேமா, புளிமா இரண்டில் ஏதாவதொன்று வரலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-21, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே