தனி இடைவெளி

அதிகாலைப் பொழுது
ஆனந்தமாய் பறவைகள்
அங்குமிங்கும் அலைகின்றன
அவற்றின் ஒலிகள் இனிய சங்கீதம்
இயற்கை இங்கே இயங்குகிறது
இயந்திரமாய் இயங்கிய நாம்
இங்கே முடங்கி கிடக்கிறோம் வீட்டில்
இயற்கைக்கு இல்லை தனிமைபடுத்துதல் ஆனாலும்
தனி .......இடைவெளியில்
பறவைகள் பறக்கும்
இயற்கையின் தனி இடைவெளி தான்
இங்கே பருவநிலைகள்
இருந்து விட்டோம் இத்தனைநாளாய்
இயற்கையை ரசிக்காமல்
இயந்திரமாய் மாறியதால்
நேரமில்லை நமக்கு
இன்று வீடுகளில்அதிகாலை விளக்குகள் எரியவில்லை
முடங்கி கிடக்கிறோம்
தனிமைபடுத்துதலால்...
இயற்கை இங்கு மாறவில்லை
மாறியது நாம் தான்
இயற்கையை மாற்றியதும்
நாம் தான்
தனிமனித இடைவெளியை
கடைபிடிப்போம்
கொரோனாவை ஒளிப்போம்

எழுதியவர் : ஜோதிமோகன் (25-May-21, 10:04 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : thani idaiveli
பார்வை : 106

மேலே