அன்பான அன்பர்களே கொரோனாவை சுத்தமாய் வழி அனுப்பி வப்போம்

அன்பான அன்பர்களே
அழகான வாழ்க்கை
அறை குறையில் முடிய வேண்டாம்
அனாதைகாக வேண்டாம்
குடும்பமே
ஆதரவற்று தவிக்கவேண்டாம்
உங்கள் குடும்பம்

கொடியதிலும் கொடியது
கொரோனாவின் தொத்து
கொடுத்து வாங்கும் வியாபாரம் இல்லை
எடுத்து சென்றுவிடும்

வறுமையிலும்
வயது முதிர்விலோ
இறந்தாலும் சொந்தம் வரும்
வம்பாய் பிடிக்கும் கொரோவைப் பார்த்து
குடும்பமே உனக்கு விடைகொடுக்க வராது

மறந்தும் வெளியில் போகாதே
வேடிக்கையாய் வெளியில்போகாதே
வெறியாட்டம் போடும் நச்சுக்கிருமி வேட்டையாடிவிடும்
மடிந்துபோகாதே
திறந்து போகாதே
முகத்தை திறந்து போகாதே
முகக்கவசம் இட்டு
தேவைப்பட்டால் போ
முகக் கவசம் உயிர்க்கவசம்

முகக் கவசம் போடவில்லை என்றால்
முகவரி இல்லாமல் போய்விடுவாய்

வேண்டாம் இந்த பிடிவாதம்
வீதியில் திரியும் விதியை
விலைகொடுக்காது வாங்கி வராதே
விரைந்து செயல்படு
விவரமாய் இருந்து செயல்படு
விலகி நின்று சமூக இடைவெளியை கடை பிடி
வீட்டிற்குள்ளும் விழிப்புடன் இரு
கஞ்சியோ கூழோ
கவனத்துடன் உண்டுவிடு

மிஞ்சி இருக்கட்டும் உன் வாழ்க்கை
வீதிக்கு போய்
மீதி வாழ்கையையும்
மிச்சம் பிடித்துவிடாதே
காசு பணத்தை தேடிக்கொள்ளலாம்
கடைசி முடிவைத் தேடிக்கொள்ளாதே

இருப்பதை வைத்து இல்லத்தில் இருந்து விடு
இல்லை என்றால் இல்லாமல் போய்விடுவாய்
தொல்லை என்று நினைக்காதே
தொத்திக்கொள்ளும்
தொத்துக்கிருமி கொரோனா

பேரிடர் காலம்
பேய் ஆசைபட்டு
போய் இடர்களை வாங்காதே
போய் சேர்ந்த பின் புலம்பி பயன் இல்லை
சுத்திவரும் கொரோனா
சுகமாய் உன் சுவாசத்தைக் குடித்துவிட்டு
சப்தம் இல்லாமல் ஆக்கிவிடும்

சாவைத்தேடி போகாதே
சகிதாரக் கூட்டமே
சம்மாதிகட்ட கண்ணுக்குத் தொரியாது
கூடி கூட்டம் போட்டு கோசம் போட்டுக்கொண்டு இருக்குது
சந்தர்ப்பம் கொடுக்காதே
அதற்கு வேண்டியது சாவு

மாமிசம் தேடிப்போகாதே
மனிதவாடைதான் அதற்கு வேண்டும்
உன் மாமிசத்தை திண்ண வேண்டாம்.

நீ செய்யும் தவறால் உன் குடும்பம் அல்லல் படவேண்டாம்
ஓடி ஓடி கதரவேண்டாம்
தேடித் தேடி மருத்துவமனை போகவேண்டாம்

கூடி கூடி நின்றால்
கொரரோனாவுக்கு கொண்டாட்டம்
கூடவே வந்து கூட்டு சேர்ந்துவிடும்
குடச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும்
கூண்டோடு உங்களை
பிடித்து விடும்
எளிய உணவை உண்டு
எளிமையாக இனிமையாக தனிமையாக வாழ்ந்திடலாம் சிலநாட்கள்

எல்லாம் வேண்டும் என்று
தடை விதிகளைத்தாண்டி
நடைபழகப்போக வேண்டாம்
நாலுபேரிடம் நலன் விசாரிக்கப்போக வேண்டாம்
நாசகார வைரஸ் உனக்கு நாள் குறிக்க வேண்டாம்

விசுவாசம் இல்லாத விஷக்கிருமி
சுவாசத்தைத்தான் சொந்தம் கொண்டாடும்
சுகமாய் இருந்து
சுற்றத்தை பெருக்கி
சுத்தமாய் உன்னை
சப்தம் இல்லாமல் ஆக்கிவிடும்

சோறுபோட்டு வளர்க்கவேண்டாம்
சொந்தக்காரணாய் வந்து
தொத்திக்கொள்ளும்
சொந்தம் இல்லாமலே ஆக்கிவிடும்
தொத்து வியாதியது
தொட்டால் ஒட்டிக்கொள்ளும்
சப்தம் போடாமல்
தன் சாம்ராஜியத்தை
கண்ணுக்குத் தெரியாது நடத்தும்
உன் சுவாசத்தையே உண்டு விடும்
வேண்டாம் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

பட்டது போதும்
படைஎடுத்து
தொட்டு தொத்தி வரும் வைரஸின் தொடர்பறுக்க
சற்று விலகியே நில்
விலை மதிப்பற்ற உயிரை தானம் செய்யாதே
தகனம் செய்யக்கூட யாரும் வரமாட்டார்கள்
நிதானமாய் செயல்படு
நீவாழவேண்டிய பூமியில்
கொரோனா வாழவேண்டாம்
ஆபத்தை விளையாட்டாய்
ஆசைபட்டு வாங்கிவறாதே
உக்கிரத்தின் உச்சகட்டம்
உயிர் வாழ வீட்டினுள் இருந்துவிடு
வீழ்த்துவோம் கொரோனாவின் தொடர் சங்கிலியை
சுத்துவோம் சுகமாய்
கொரோனாவை சுத்தமாய் வழி அனுப்பிவிட்டு
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (27-May-21, 10:12 am)
பார்வை : 33

மேலே