நீ மட்டும் எப்படி..?
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
பெண்ணே!
உன் இதய வீட்டுக்குள்
என்னை
அழைத்துக்கொண்டாயா?
இல்லை
வாசலிலேயே!
நிற்கவைத்திருக்கிறாயா?
கவலையும்
வேதனைகளும்
கொல்வதை விட....
உன்னுடைய
மௌனமே!
என்னை
அதிகம் கொல்லுகிறது....
உனக்கு
மகிழ்ச்சி கிடைக்குமென்றால்
நான் தொலைந்த விடவும் தயார்....!
நீ!
என்னை பார்க்காமல்
போவதால்
கல்லாய் நிற்கின்றேன்....
காலப்போக்கில்
மண்ணாய் மாறிவிடுவேன்....
நான் இறந்த பிறகு...
உன் வீட்டைச் சுற்றி
முளைக்கும்
புல்லைக் கூட
பிடிங்கி விடாதே!
கெஞ்சி கேட்கிறேன்
அது
நானாக கூட இருக்கலாம்....
உனக்காக பிறந்த
நான் இறக்கலாம்
நமக்காக பிறந்த கவிதைகள்
என்றுமே! இறக்காது.....
நீ மட்டும் எப்படி
நான் அனுமதிக்காமலேயே
என் இதய வீட்டுக்குள்
வந்தாய்....?
*கவிதை ரசிகன்*
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰