அவள் முகம்

முற்றத்தில் வந்த அவள் முகம்
ஏற்றமாய் பொழிந்தது அந்த சித்திரை
பூரண நிலவொளியாய் நீலவானில் அந்த
நிலவையே மெல்ல நான் கேட்டேன்
'நிலவே நீயே சொல்லு இன்று
மாசிலா நிலவாய் ஒளிரும் இவள்
முகம் அழகா இல்லை உன்முகமா'
என்று.... கண்மூடி கண் திறக்கும்
முன்னேற் காணாமல் போனது வானில்
தங்க நிலா மேகத்தின் பின்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-May-21, 7:40 pm)
Tanglish : aval mukam
பார்வை : 234

மேலே