நீதி

நீதி நிலைக்கும் வரை நீதி
மீதி மிதி படும் நீதி
நடுநிலை இருக்கும் வரை
தலைக்கும் நீதி

நடு நிலை நடுங்கிவிட்டால்
தட்டும் அநீதி
மாண்டு விட்ட மனசாட்சியில்
மண்டுமோ நீதி
மக்கிடும் நீதி

வெற்றிலையில் சேர்த்த சுண்ணாம்பு பாக்குமல்ல நீதி
தின்னு துப்புவதற்கு

விலைபோன அநீதியா நீதி
விற்கபட்ட நீதிதான் நீதியா

நிலுவையில் உள்ள கடனா நீதி

நீதி நீதி நீதி
நித்திரையில் உறங்கியதோ நீதி
நீதி நீதி நீதி

நீ தந்த பணத்தில்
புதைந்ததோ நீதி

நீதி நீதி நீதி
வாய் திறக்காதது நீதி
வந்தே கூறாது நீதி
வருமோ நீதி

நீதி நீதி நீதி
சேற்றில் மறைந்ததோ நீதி
நீதி நீதீ நீதி
வஞ்சித்த நீதியில்
வருமோ நீதி

நீதி நீதி நீதி
நிலைக்குமோ நீதி
சாக்கடையான சமுதாயத்தில்
கிடைக்குமோ நீதி

மீதி மீதி மீதி
மிதி பட்ட நீதிக்கு
கிடைக்குமோ நீதி
சாதிபேதம் பார்ப்பதில்லை நீதி
உற்றார் உடன் பிறப்பு நட்பு பகை பார்ப்பதில்லை நீதி

நீதி இது இரட்டை யெழுத்தில் பிறந்த ஒற்றை நெடில்

நீதி யென்ன நிருத்து வாங்கும் பொருளா

புகழ் கொன்பதில்லை நீதி
புழுங்குவதும் இல்லை நீதி

கறைதான் படுமோ நீதி
அக் கரைதான் போகுமோ நீதி
அக்கரையற்றதோ நீதி
நின்றுபார் நீதியின் பலம் தெரியும்
கொன்று விடலாம் என்று
நினைக்காதே நீதியை
வென்று நிற்கும் நீதி

வந்தே நெஞ்சை அறிக்கும் நீதி

வெந்து போகுமுன் உன்னை
நொந்து போக வைக்கும் நீதி

நீதி விலை போகலாம்
நீ நீதிக்கு விலை போகும் காலம் வரும்
வலைபோடும் நீதியில்
வருந்தியே வாழ்கை முடிப்பாய்

நினைத்திடு மனமோ
நீதி என்றும் நிலைக்கும்

நல்லது செய் அதை
நயம்பட செய்
பொல்லாமை வேண்டாம்
பொறுமையுடன் செய்
நியாத்துடன் நடுநிலையாய்
செயல் படு
அநீதியின் நிழல் கூட
நீதி பேசும்
ஆனால்
நீதி நிலைக்கும்
நிம்மதி பிறக்கும்

காசு பணத்தில் புதைக்காதே
நீதியை
புதைந்தது போதும்
பூக்கட்டும் நீதி
பாக்கட்டும் மீதி
தடுக்கட்டும் அநீதி.

அ.முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (30-May-21, 10:47 am)
Tanglish : neethi
பார்வை : 574

மேலே