பிஞ்சுக்கை அழகு பிசஞ்ச மனசு அழகு

பிஞ்சு கை அழகு
பிரித்த பஞ்சழகு
பரிச்ச பூவழகு
பிரிச்ச மூட்டையழகு
உடைச்ச முட்டையும் அழகு
உடுத்திய உடையழகு
விரிச்ச தலை அழகு.

வானவில் வடித்த
வண்ண ஜாலமும் அழகு
விண்ணில் நட்சத்திர கூட்டம் அழகு
விரையும் மேகம் அழகு
விடியும் பொழுதழகு
வாலிப முறுக்கழகு
வயதில் அரும்பும் மீசை அழகு.

வண்ண வண்ண நிறங்கள் அழகு
வந்து சென்ற வசந்தம் அழகு

இளமையில் நினைவழகு
வடிச்ச இடை அழகு
வயிற்றுக்கு கீழ் கட்டிய சேலை அழகு

பிடிச்ச மூக்கழகு
பிடிவாதகண் துடிப்பழகு
வருத்தும் அந்த நாக்கழகு
வரிஞ்ச கண்ணழகு
வயதில் வந்த உறக்கம் அழகு.

விரிந்த புருவம் அழகு
விதைத்த காதழகு
உரிச்ச நெற்றியழகு
சிரிச்ச வாய் அழகு
அடிச்ச விக்கல் அழகு
முத்துப் பல் அழகு
முன் நிற்கும் கோபம் அழகு
முடிச்சியின் இருக்கம் அழகு

முடிந்த கூந்தல் அழகு
முனகும் வார்த்தை அழகு
முகத்தில் பொட்டழகு
தீட்டிய மையழகு
திருக்கும் மூக்குத்தியழகு
திரிந்த தோடழகு
திருடிய கண் அழகு
மார்பில் தங்கிய நகையழகு
மறைத்த நாணம் அழகு
வயதின் கூன் அழகு
வயோதிக வாழ்வழகு
ஆடும் தலைழகு
தலைக்கு வந்த நரை அழகு
தொங்கிய தோல் அழகு
தங்கிய சிரிப்பழகு
பொக்கைவாய் அழகு
தாங்கிய கைகள் அழகு
தள்ளாடும் கால் அழகு
காதில் விழும் சொல் அழகு
வாயிலிருந்து உதிக்கும் சொல்லும் அழகு
சுவைக்கும் வாய்களின் அசைவு அழகு
அன்பின் பிறப்பே அழகு

தொடரும்
ஆ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (30-May-21, 10:30 am)
பார்வை : 414

மேலே