திருமணம்

ஓர் நிலத்தில் விதையாய் விழுந்து
குழந்தை என்னும் செடியாய் முளைத்து
குமரி என்னும் மலராய் மலர்ந்ததும்
பருவமங்கையாம் அச்செடியை
வேருடன்பிடுங்கி சீர்வரிசை என்னும்
பிடிமண்ணுடன் புகுந்தவீடெனும் மறுநிலத்தில் நடும் நிகழ்வே திருமணம்

ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (30-May-21, 8:56 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : thirumanam
பார்வை : 81

மேலே