வாழ்க்கை இலக்கணம்

இந்த கவிதை கவிஞர் கவின் சாரலன் அவர்களின் "நில்லடா பெஞ்சின்மேல் ..." என்ற கவிதையின் தாக்கத்தில் உருவானது ...
இந்த கவிதைக்கு கிடைக்கும் "மதிப்புக்கள்" அனைத்தும் கவிஞர் கவின் அவர்களுக்கு சமர்ப்பணம் ...

பள்ளியில் மொழி இலக்கணம்
பயிலும் போது ஏற்படுகின்ற
பிழைகளை திருத்திக்கொள்ள
"ஆசானின்" துணை
நம் எல்லோருக்கும் கிடைக்கும் ..!!

மீண்டும் இலக்கண தவறுகள்
ஏற்பட்டாலும் நம் பாடத்தின்
மதிப்பெண்களில்தான்
குறைவு தெரியும் ..!!

அந்த தவறு
நம் எதிர்கால பாதைக்கு
தடைக்கல்லாக இருக்காது ..!!

ஒரு மொழிக்கு இலக்கணம்
எப்படி தேவையோ ..அதுபோல்
வாழ்க்கை என்னும் பள்ளியில்
வாழ்வதற்கு
சில இலக்கணங்கள் தேவை ..!!

நம் வாழ்க்கை இலக்கணத்தில்
தவறுகள் ஏற்பட்டால்
திருத்தி கொள்வதற்கு
அனுபவம் என்னும்
ஆசான் உள்ளான்...!!

அந்த ஆசானின் துணையை
புறம் தள்ளி "நீ" சென்றால்
சமுதாயத்தில் உனக்கு இருக்கும்
மதிப்பும் மரியாதையும் இழந்து
உன் வாழ்க்கை பாதையே
தடம்மாறி போய்விடும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-May-21, 12:39 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 263

மேலே