வஞ்சகம் வஞ்சகன்

வஞ்சகம்
நெஞ்சகத்திலே நஞ்சாம் வஞ்சகம்
வஞ்சகம் செய்யும் வஞ்சகனை
நெருக்காமாய் வைக்காதே

கொழுத்தாமல் எரிவது
வஞ்சகத்தீ
கொழுத்தி விட்டே சிரிப்பவன் வஞ்சகன்

வாஞ்சயாய் பழகி
வஞ்சகம் செய்பவன்
வஞ்சகன்

வாய்விட்டுபேசாது
நாசம் செய்பவன் வஞ்சகன்

வஞ்சகம் தாங்குமா நெஞ்சம்
வந்தே அழிப்பது வஞ்சகம்
வாய்விட்டு பேசாது
வந்தே அழிக்கும் வஞ்சகம்

வதந்தி தீ பரவினால் அழிக்கும்
வஞ்சகத் தீ இருந்தே அழிக்கும்

வஞ்சம் கெஞ்சுமோ
தஞ்சம் புகும் வஞ்சகன்
நெஞ்சில்

கெஞ்சிடும் வஞ்சகம்
கொழுந்து விட்டு எரியுமே வெண்சினம்

மறைத்திடும் வஞ்சகம்
திரையிட்ட மேகமாக

மறைந்திட்ட வஞ்சகம்
மடித்திடும் மறைத்தே
மறைந்தே கொன்றிடும்
பதுங்கிய புலியாக

வஞ்சகம் அழகாக
பூத்த விஷப் பூவாகும்.
வஞ்சகன் உடம்பே விஷம்

வஞ்சகன் நெஞ்செல்லாம்
வஞ்சத்தை நிறப்பி
தோள் மீது கைபோட்டே
தேள் போல் கொட்டிடுவான்.

வாளினை கையில் மறைத்து
வந்தே தொழுதிடுவான் வஞ்சகன் .

வஞ்சகன் கூடவே இருப்பான்
குதர்க்கம் பல பேசி
குற்றங்கள் பல செய்வான்

நாசக்காரன்
நேசிப்பவன் போல் நடித்திடுவான்
வஞ்சகச் செயல் பல செய்திடுவான்

வம்பாய் துன்பங்கள் பல இழைத்திடுவான்
வள்ளல் போல் இவன் நடித்திடுவான்
வஞ்சம் தீர்க்க தயங்கமாட்டான்

நரிக்குணம் படைத்தவன் இவன் அன்றோ
நன்றாக பாசங்கு செய்திடுவான்.

வஞ்சக்காரன் வாய் சொல்லில் கெட்;டிக்காரன்
இவன் செயலிலும் கெட்டிக்காரன்

தீட்டிய புத்தியை
தீமைக்காகவே பயன் படுத்துபவன் வஞ்சகன்

கூர்மைவாளிலும் கொடியவன்
கூடியிருப்பது போன்று நடிப்பான்
கூட்டத்தின் மத்தியில்
பதுங்கி இருக்கும் கள்வன் அவன்

நஞ்சை நாவில் வைத்தே
நயமாகபேசுவான்

வஞ்சக வலையில்
வீழ்த்தியே
விரும்பியதை விலையாக பெற்றிடுவான்
வஞ்சகக்காரன்.

நல்லவன் போல் வேடம் தரித்து
நாசங்கள் பல செய்திடுவான்.

வஞ்சகன் வம்பாய்
விருந்துண்டு நஞ்சையே
கக்குவான்.

நஞ்சை நாவில் வைத்து
நல்லது பல பேசி
பொல்லாத வினைகள் பல செய்து
இருந்தே அழித்திடுவான்
இதயத்தைக் கிழித்திடுவான்.

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (30-May-21, 3:15 pm)
பார்வை : 260

மேலே