பூமி
பூமி
மேலும் இல்லா
கீழும் இல்லா
அண்டவெளியில்
தானும் சுழன்று
சூரியனை சுற்றும்
இந்த பந்து
அழகின் அழகாய்
இருக்கும் இயற்கைகள்
எல்லாம்
பந்தாய் சுருட்டி
காத்து வைத்திருக்கும்
இந்த அழுக்கு கூடு
முக்கால் முழுதும்
நீராய் இருந்தும்
வான் வெளி எங்கும்
சிந்தாமல் சிதறாமல்
எப்படித்தான்
வான் உலகில்
உலவுகிறது
இந்த உருண்டை பந்து ?