வாகை சூடல்
.வாகை சூடல்
👍👍👍👍👍👍
மண்ணில் விஷத்தை மனிதர் விதைத்தோம்
நண்ணியது இன்று நச்சுக் கிருமி !
மனிதனை அழித்து வாகை சூட
மண்ணில் கேட்குது கூகைச் சத்தம் !
சலக்கு நிறைந்த வாழ்க்கை முறையை
பழக்கம் செய்து வாழ்ந்ததன் விளைவு ..!
ஆற்றில் மூழ்கும் உமணர் நிலையாய்
அனுதினம் கேட்குது மனிதனின் ஓலம் !
ஓர்ந்து ஓர்ந்து உருவம் மாற்றி
தேர்ந்த கிருமியால் தினம் தினம் அதிக்கலம் !
உரவோன் என்று பீர்த்திட்ட மனிதன்
உயிர்வாழ இனியும் உயிர்வளி ஏது !
பணம்தனைப் படைத்தும் பலம்தனை இழந்து அலந்தவர் ஆணோம் ஆயுதம் இன்றி..!
புன்மை என்று புரிந்த போதும்
உண்மையில் யாரும் உணரவும் இல்லை !
இயற்கை அறைந்த கவுள்தனின் வீக்கம்
இன்றைக்கு புரிந்தது மரணத்தின் நிழலில் !
அங்கன் கூடி வாழும் பறவை
அழகாய் கைதட்டிச் சிரிக்குது நம்மை .!
உலைக்குள் போட்டு சமைக்குது கிருமி முழைக்குள் ஒழிய முயற்சித்தல் வீணே !
மனித ஓவம் மண்ணில் அழியுது
கிருமி வந்து தண்ணீர் தெளிக்குது..!
க.செல்வராசு
😀😀😀😀😀😀😀😀😀😀😀