மரத்திடம் ஒருவேண்டுதல்

நிழல் கொடுத்தாய்!
பசியாறப் பழங்கள் கொடுத்தாய்!
பறவைகள் கூடுகட்ட
இடம் கொடுத்தாய்!

உன்னைக் கோடாரியால்
கழுவிலேற்றி நாங்கள்
காலனின் கைகளில்
சிக்குண்டு கிடக்கிறோம்...

உன் சுவாச வேர்களை
பிடுங்கி எறிந்தோம், இன்று
சுவாசிக்கக் காற்றில்லாமல்
அலைமோதுகிறோம்...
நாங்கள் செய்தது துரோகமே...
விழும் ரத்தத்துளிகலெல்லாம்
எழும் அசுரர்களை போல்
வீசிய வேர்களிடமிருந்து
மீண்டும் முளைத்துவந்துவிடு!

காற்றைத் தூய்மைப்படுத்து!
உலகத்தை மேன்மை படுத்து!
விலை பேசும் காற்றை
விலையில்லாமல் செய்துவிடு!
எங்கள் சுவாசப் பைகளை
நிரப்பிவிடு!
அப்பெருந்துரோகம் மன்னித்துவிடு!

__________________________________

எழுதியவர் : ரோகிணி (29-May-21, 7:58 pm)
பார்வை : 186

மேலே