எல்லாம் இன்று நினைவுகளில்................
ஈவ்டீசிங்கிற்கு பயந்து
சீனியர் என்று பொய்சொல்லி
சீனியரையே ஈவ்டீசிங்
செய்ததும்,
முதல் வகுப்பிற்கு
தாமதமாய் சென்றதும்,
முடிந்தவரை பொய்சொல்லி
சமாளித்ததும்,
கட்டடித்து சினிமாவுக்கு
சென்றுவிட்டு, அதை சமாளிக்க
நாம் யோசித்தவைகளையே
ஒரு சினிமா எடுத்துவிடலாம்.
கடைசி ஆண்டு எல்லாம்
முடித்துவிட்டோம் என்று நினைத்து
ஆண்டு நிறைவுவிழா கொண்டாடி
நாமெலாம் பிரியமனமின்றி
பிரிந்து சென்றோம்.
கல்லூரி சந்தோசமெல்லாம்
இனி கிடைக்காது,
உன்னை மீண்டும்
எப்போது சந்திப்போம்
என்று ஏங்கிகொண்டிருக்கும்போது,
ரிசல்ட் வந்தது
நாம் மூன்று பாடம் அரியரென்று,
மீண்டும் அரியரோடு
ஆடிப்பாடிய அந்த நாட்கள்,
எல்லாம் இன்று நினைவுகளில்
நீந்திக்கொண்டிருக்கிறது நம் நட்பால்........
இடித்துகொள்ளும் தூரத்தில்
பயணித்த நம் நட்பு,
இன்று ஈமெயிலிலும்,
செல்போனிலும் தொடர்கிறது
நம் உண்மையான நட்பால்....