இழந்துபோனேன் நண்பா உனையே
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னோடு
பேசிபழகிய பழகிய காலத்தில்
சேர்த்துவைத்து கொண்ட புன்னகையின்
மிச்சத்தால்
என் பிரிந்து சென்றாய் ?
எனை ரசிக்கத்தானே !
தன் கையை உதறி
தானே குழந்தை
நடக்கிற வேளை ரசிக்கிற தாய் போல
உன்னை பிரிந்து நான் வாழ்கிற
நாளை !
கசக்கிற வேப்பிலை ஆகுமே மருந்தாய்
உன் பிரிவும் என் நட்பை பலபடுத்துமே
நண்பா
பிறிதொரு கலாம் உன்னை பிரியேன்
என்று குருதியும் உறுதிகொள்ளும் நட்பால்
கடற்கரை மணலில் எழுதி போன
பெயர் போலே நம் நட்பு
மழைவந்தழித்திடும் முன் கடல்
அலையாய் வந்து எடுத்துகொள்ளும்
காலம் நம்மை பிரித்திடும் முன்
போலி சமுதாயம் நம்மை
பிரித்திட்டதே !
ஆணும் பெண்ணும் நட்பாய் பழகைலே
காதல் என்று கலைத்திடுதே
தெரிவதில்லை அதற்கு
காயமில்லை காதல் போலே நட்பு
பழகிய பின் மறந்துவிட்டால் ஆறிப்போக
இழந்து போன உறுப்பென்றால்
எப்படி வலியாய் இருக்குமென்று
உன்னை கண்டெடுத்தேன்
பூமியிலே விண்மினாய்
புரிந்துகொள்ளா சமுதாயம்
விம்மி விம்மி நானும் அழுதிடதான்
திருப்பி அனுப்பிவிட்டது வானத்திற்கு
என் மனமென்ற அட்சையபாத்திரத்தில்
அள்ளஅள்ள குறைவதில்லை
உன் நினைப்பு
எதை நாம் கொண்டுவந்தோம்
அதை நாம் பூமியில் இழப்பதற்கு
வானத்திலும் நம்மோடு நம் நட்பு !
சாகடிக்கபட்டாய் நீ ஆயினும்
சாகவில்லை நம் நட்பு
(என் நண்பனின் தற்கொலைக்கு
காரணம் நானா , நட்பா, சமுதாயமா ?)
இந்தகவிதையை என் நண்பன் வினோத்தின்
பாதத்தில் அர்ப்பணிக்கிறேன்.