காலம்🍂

ஊரடங்கு
காலத்திலும் தனது
இல்லத்தினுள்
உறங்காத முதியவர்
தன்னுடலை சுமந்துக்கொண்டு
தன்னுடைய மழலைப் பருவத்து
பாத சுவடுகள் பதித்த
இடங்களில் எல்லாம்
சுடும் வெயிலை கடந்து!
தோல் சுருங்கி! முதுகுத்தண்டு வளைந்தும்
நிமிர்ந்த நடையோடு
தன் மழலை பருவமதை மீண்டும் ருசிக்க
தான் நடை பழகிய ஏரிக்கரை,
ஒதுங்கி ஓய்வெடுத்த மர நிழல்!
தன் தாகம் தீர்த்த ஏரி நீர் !
தனது பசி தீர்த்த ஏரி மீன்!
சுட்டெரித்த ஆதவன் வெப்பத்தை
வென்றெடுத்த மதகு நீர்
குளிர்ச்சி! குளியல் என
கண் முன்னே தொடருகிறதாம்
முடிவை நோக்கி பயணிக்கும்
கிடங்கல் ஏரி நிலை கண்டு
அந்த முதியவரின் மன
வேதனையதை விதைத்துச் சென்றது
அந்த ஒரு நொடி
ஓராயிரம் குற்ற உணர்வோடு
புகைப்படம் ஆக்கினேன்
நவீன உலகத்து மழலையாக
நான்😔...........
....................ர.ஸ்ரீராம் ரவிக்குமார் 🍂

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (4-Jun-21, 12:12 am)
பார்வை : 46

மேலே