கார்முகிலாள் கண்மணியே

கார்முகிலாள் கண்மணியே ! காத்திருந்தேன் உன் ஸ்பரிசத்திற்கு
கரியது வருமுன் கேட்கும்
கழுத்து மணி ஓசை போல்
ஓவென்ற ஓசையுடன் நீ வருமுன்
ஓங்கி இடியது இடிக்க
திருவிழா வெளிச்சமாய்
மின்னலது பளிச்சிட
வானமகள் உன்னை வழி அனுப்ப
நீயோ மத்தாப்பு பூச்சரமாய்
என்னை நனைக்கின்றாயே!
உன்னில் நனைந்த நான்
புத்துணர்ச்சி பெறுகிறேன்
கத்திரி வெயிலில் காய்ந்த
நிலமகளுடன் நீ கலந்ததனால்
மண்மகளும் மணம் வீசுகின்றாள்
கோடைமழையாய் வந்து
அகத்தையும் புறத்தையும்
குளிர்விக்கும் மழையே! நீ வாழியவே!

எழுதியவர் : ஜோதிமோகன் (4-Jun-21, 1:17 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 58

மேலே