தேன் உண்ட வண்டு
ஆசை வந்ததடி உன்மேலே
பாசம் வைத்தேனே உன்மேல
அழகு சிரிக்கும் உன் இதழில்
நான் ரசித்தது உன்மேல
கொடியும் அசைந்தது காற்றில்
உன் இடையும் அசைந்தது நடையிலேயே
கண்ணில் பேசும் உன்மொழி
புரிந்ததடி எனக்கும்
வாய் பேசாத மலரே
நான் காண வண்ண ஆடை கட்டிக்கொண்டாயோ
தேன் உண்ட வண்டினை போல்
மயங்கி கிடந்தேனே உன் மடியில்